சென்னை மாநகராட்சி அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சி
திரையின் மூலம் தொழில்நுட்பம் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும்போது, அது மாணவர்களை ஈர்க்க முடியும் என்ற நோக்கத்தில் சாம்சங் என்ற நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக 20 மேல்நிலை மற்றும் 8 நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் செய்து தர புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு வகுப்பறையில் 1 எல்எப்டி ஸ்மார்ட் ஸ்கிரீன், 40 கணினிப் பலகைகள், பிரிண்டர், சர்வர், யுபிஎஸ் மற்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்திற்கான மென்பொருள் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வள வகுப்பறை பாடத்திட்டத்தின் மூலம் 29,596 மாணவ,மாணவியர்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்திற்கு ரூ.8 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...