சென்னை: பிற மாநில மாணவர்களுக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, கல்லுாரிகளில், பி.இ., -
பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிக்க, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதில், தமிழகத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் மட்டுமே
சேர்க்கப்படுகின்றனர். பிற மாநிலத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு, தனி
கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை, அண்ணா
பல்கலை அறிவித்துள்ளது. பிற மாநில மாணவர்கள், www.annauniv.edu என்ற
இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலையின் பிரிவு மற்றும் வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி.,
கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழிற்நுட்பக் கல்லுாரி, ஆர்க்கிடெக்சர்
கல்லுாரியான, 'சேப்' மற்றும் குரோம்பேட்டையிலுள்ள, எம்.ஐ.டி., கல்லுாரி
போன்றவற்றில், இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
பி.ஆர்க்., படிப்புக்கு, இரு இடங்கள் மட்டும் ஒதுக்கப்படும். காஷ்மீரில்
இருந்து இடம் பெயர்ந்தவருக்கு, ஒரு இடம் உள் ஒதுக்கீடு உண்டு. தென் மண்டல
மாநிலங்களுக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல மாநிலங்களுக்கு,
மண்டலத்திற்கு இடம் ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...