இந்தியாவில் ஒரு பூகம்பம் எச்சரிக்கை பகுதிகளில் நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள்
துளையிடுவதால் அது பெரும் நிலநடுக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சங்களைத் தூண்டியுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் நில நடுக்கம் அடிக்கடி ஏற்படும் இடத்திற்கு சென்று துளையிட்டு நிலத்தடி நீர் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். நிபுணர்கள் மேற்கு மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்தின் நீர் மின் அணையின் அருகே உள்ள மலைபகுதியில் துளையிட்டு வருகின்றனர்.
1962 ஆம் ஆண்டில், அணை பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. நீர்த்தேக்கம் ஒரு டிரில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரம்பி உள்ளது. இந்த பகுதியில் இதுவரை 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நில நடுக்க அளவுகள் 5 முதல் 5.9 ரிக்டர் அளவுகள் ஆகும்.
இதன் விளைவாக மனிதனால் உருவாக்கப்படும் நீர்மின் ஆற்றல்கள் பூமியதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதாக நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள் இந்த பகுதியில் அடிக்கடி துளையிட்டு வருகிறார்கள்.
இந்த திட்டத்தின் முக்கிய புவியல் நிபுணர் டாகடர் சுகந்தாராய் கூறும் போது இந்த துளை போட்டும் ஆராய்ச்சி என்பது பூமி அதிர்ச்சிக்கு பின்னரும் அதிர்வுக்கு முன்னரும் அங்குள்ள பாறைகளில் ஏற்படும் வேதியம் மற்றும் பிற மாறுபாடுகள் குறித்த மாற்றங்களை ஆய்வு செய்வதற்கு தான்.
இருப்பினும், இது சில விஞ்ஞானிகளிடையே பயம் ஏற்பட்டுள்ளது, இது போன்ற துளையிடுவதால் பூமியதிர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது என நம்புகிறார்கள்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...