இந்த மாதம் ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டது
. இதனால் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. புதிய வரிவிதிப்பு முறை குறித்து வணிகர்கள் மற்றும் பொது மக்களிடையே இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதனால் பல்வேறு துறைகள் ஜி.எஸ்.டி-யால் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் இருக்கின்றன. குறிப்பாக மருந்துப்பொருட்கள் துறை இதனால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு 5 நாட்கள் கடந்துள்ள போதிலும் தமிழகத்தில் மருந்து வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே இன்னமும் மருந்து கையிருப்பு சீராகாமல் உள்ளது. அதிகபட்ச வரி, அதற்கான மென்பொருள் கட்டணம் வழங்குதலில் உள்ள சிக்கல்களால் இன்னமும் மருந்து கையிருப்பு சீராகவில்லை என்று மருந்து வியாபாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து தீபம் ஹாஸ்பிட்டல்ஸ் தலைவர் டி.என் ரவி சங்கர் கூறும்போது " எங்கள் மருந்துவமனைக்கு அதிகமாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் வருகின்றனர். ஆனால் விநியோகஸ்தர்களிடமிருந்து இதற்கான மருந்துகள் தற்போது போதிய அளவில் கிடைக்கவில்லை. எங்களிடம் அதிகமான கையிருப்பு இருந்ததால் எங்களால் இதுவரை நோயாளிகளுக்கு வழங்க முடிந்தது. இன்னும் 2-3 நாட்களில் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிடும்" என்றார்.
ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மருந்து கையிருப்பை குறைத்ததால் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் சிறு மருந்து வியாபாரிகள் சிலர் குறிப்பிட்ட மருந்துகள் கிடைக்காமல் அதன் விற்பனையை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்கல்களால் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் மருந்துத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...