புதுடில்லி:இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி, இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவுக்கும் குறைவாகவே
உள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் நேற்று(ஜூலை-21)
கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல்,
இந்தியாவில் உள்ள டாக்டர்களின் எண்ணிக்கையை பற்றிய தகவலை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது:'இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 10,22,859 அலோபதி டாக்டர்கள், மருத்துவ கவுன்சிலில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதன்படி 80 சதவீத டாகடர்கள் அதாவது 8.18 லட்சம் டாக்டர்கள் தற்போது மருத்துவச் சேவையில் இருக்கின்றனர். மக்கள் தொகை 1.33 பில்லியன் இருக்கும் நிலையில், மக்கள் தொகை டாக்டர் விகிதமானது 1000:0.62 என்ற அளவில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு 1000 பேருக்கு ஒரு மருத்துவர் என்று நிர்ணயித்த நிலையில் இந்தியாவில் குறைவான மருத்துவர்களே உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...