அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய
நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன்
பட்டியல் பதிவு செய்யப்பட்டு, கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்'
படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.

இதில், தாமதம் ஏற்படுவதோடு, காகித பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊதியம், பணப்பலன் பட்டியல் தயாரித்து 'ஆன்லைன்' மூலமே கருவூலத்திற்கு அனுப்பப்படும்.
இதற்காக வரைவு அலுவலர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மென்பொருளை கம்ப்யூட்டரில் ஏற்றுவதற்காக கருவூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் பழையதாகவும், 'மெமரி' குறைவானதாகவும் உள்ளன. இதனால் அவற்றில் புதிய மென்பொருளை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருவூல அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு அலுவலர், பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும். மேலும் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் இயங்குவதற்கு 4 ஜி.பி., 'ரேம்' வேண்டும். இதனால் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றிவிட்டு, புதிதாக வாங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் என்றார்.
Good news
ReplyDelete