தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்தி பள்ளி கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும்
ஒன்பது ஆசிரியர்கள் வீதம் 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவர். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1:40 என்ற ஆசிரியர்-
மாணவர் விகிதம் பின்பற்றப்படும். அங்கு அடிப்படை வசதிகள் செய்திட எம்.பி.,
எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள
வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...