நாட்டின் முதல், 'ஏசி' கழிவறை மும்பை, தாதர்
பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
சோலார் மின் தகடுகள்
மும்பை நகரின் தாதர் பகுதியில், மும்பை - தானே மாநில அரசு பஸ் நிலையத்திற்கு அருகே, 'ஏசி' கழிவறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் வளாகத்தில் சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், சானிட்டரி நாப்கின் தரும், தானியங்கி இயந்திரமும் இங்கு உள்ளது. 'ஏசி' மற்றும் இந்த தானியங்கி இயந்திரம் செயல்பட தேவையான மின்சாரம், சோலார் மின் தகடுகள் மூலம் பெறப்படுகிறது. இந்த இயந்திரத்தில், ஐந்து ரூபாய் செலுத்தினால் நாப்கின் வெளியே வரும்.
கண்ணாடி கூரை
சிவசேனா கட்சியின் கவுன்சிலர் அமே கோயல் என்பவர் தான், 'ஏசி' கழிப்பறை அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர் கூறுகையில், '' உள்ளாட்சி தேர்தலின் போது, பெண்களுக்கு தேவையான நாப்கின் பொது கழிப்பறைகளில் வைக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தோம். தற்போது, 'ஏசி' கழிப்பறையோடு அந்த வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது,'' என்றார். இந்த கழிப்பறையின் கூரை பகுதி கடினமான கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வரும். இதுபோன்ற கழிப்பறைகள் மும்பையின் பல பகுதிகளில் நிறுவப்படும் என மாநகராட்சி மேயர் விஸ்வநாத் மகாதேஸ்வர் தெரிவித்துள்ளார். இந்த, 'ஏசி' கழிப்பறையை யுவசேனா அமைப்பின் தலைவர் அதித்ய தாக்கரே திறந்து வைத்தார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...