பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு,
இன்றுடன் முடிகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜே.இ.இ., நுழைவு தேர்வு
முடித்தவர்களிடம், அண்ணா பல்கலை விண்ணப்பங்களை பெறவில்லை.
தமிழகத்தில், 53 பி.ஆர்க்., கல்லுாரிகளில், 2,720
இடங்கள் உள்ளன. இதில், 2,000க்கு மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு
மட்டும், தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் மூலம்,
மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழக இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியினர்,
இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு, ஜூன்,
25ல் துவங்கிய ஆன்லைன் பதிவு துவங்கி, இன்றுடன் முடிகிறது. இதில், நாட்டா
என்ற தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலின் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால்
மட்டுமே விண்ணப்பிக்கலாம் என, கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. ஆனால்,
மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., நடத்திய, ஜே.இ.இ., நுழைவு தேர்வில்,
ஆர்கிடெக்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து கொள்ளலாம் என,
தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது. இதை, அண்ணா பல்கலையின்
கவுன்சிலிங் கமிட்டி ஏற்று கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர்,
உயர்நீதிமன்றம் சென்று, தங்கள் விண்ணப்பத்தையும் ஏற்க அனுமதி பெற்றுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு பெற்ற, மாணவரின் விண்ணப்பத்தை மட்டும், நீண்ட இழுபறிக்கு
பின், கவுன்சிலிங் கமிட்டியினர் நேரில் பெற்றுள்ளனர். ஆன்லைனில் பதிவு
செய்ய முடியவில்லை. யாராக இருந்தாலும், தனித்தனியே நீதிமன்ற உத்தரவை பெற்று
வர, கவுன்சிலிங் கமிட்டியினர் அறிவுறுத்துகின்றனர். அதனால், மாணவர்களுக்கு
வழக்குக்காக கூடுதல் செலவும், அலைக்கழிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித் துறையினர் கூறியதாவது: தமிழக இன்ஜி., கவுன்சிலிங்
கமிட்டியும், உயர்கல்வித் துறையும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு சிக்கல்
ஏற்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அதிகாரிகள், தாங்கள் முடிவு எடுப்பதை
மட்டுமே செயல்படுத்த வேண்டும் என, கவுன்சிலிங் கமிட்டியினரை
கட்டாயப்படுத்துகின்றனர். இந்த, 'ஈகோ' பிரச்னையால், ஜே.இ.இ., நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை ஏற்பது குறித்து,
கவுன்சிலிங் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. அதனால், மாணவர்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு,
இன்றுடன் முடிகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜே.இ.இ., நுழைவு தேர்வு
முடித்தவர்களிடம், அண்ணா பல்கலை விண்ணப்பங்களை பெறவில்லை. தமிழகத்தில், 53
பி.ஆர்க்., கல்லுாரிகளில், 2,720 இடங்கள் உள்ளன. இதில், 2,000க்கு மேற்பட்ட
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், தமிழக அரசின் சார்பில், அண்ணா
பல்கலையில் கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழக
இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியினர், இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த
ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு, ஜூன், 25ல் துவங்கிய ஆன்லைன் பதிவு துவங்கி,
இன்றுடன் முடிகிறது. இதில், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலின்
திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என,
கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ.,
நடத்திய, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், ஆர்கிடெக்சர் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களையும் சேர்த்து கொள்ளலாம் என, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில்
அறிவித்துள்ளது. இதை, அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் கமிட்டி ஏற்று
கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர், உயர்நீதிமன்றம் சென்று,
தங்கள் விண்ணப்பத்தையும் ஏற்க அனுமதி பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவு
பெற்ற, மாணவரின் விண்ணப்பத்தை மட்டும், நீண்ட இழுபறிக்கு பின், கவுன்சிலிங்
கமிட்டியினர் நேரில் பெற்றுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை.
யாராக இருந்தாலும், தனித்தனியே நீதிமன்ற உத்தரவை பெற்று வர, கவுன்சிலிங்
கமிட்டியினர் அறிவுறுத்துகின்றனர். அதனால், மாணவர்களுக்கு வழக்குக்காக
கூடுதல் செலவும், அலைக்கழிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்
துறையினர் கூறியதாவது: தமிழக இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியும், உயர்கல்வித்
துறையும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அதிகாரிகள், தாங்கள் முடிவு எடுப்பதை மட்டுமே செயல்படுத்த
வேண்டும் என, கவுன்சிலிங் கமிட்டியினரை கட்டாயப்படுத்துகின்றனர். இந்த,
'ஈகோ' பிரச்னையால், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்
விண்ணப்பங்களை ஏற்பது குறித்து, கவுன்சிலிங் முடிவு எடுப்பதில் இழுபறி
நீடிக்கிறது. அதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...