சென்னை: ''வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த ஊழியர்கள், தற்போது,
பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி
ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்துள்ள
ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு, 10 நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால்,
அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, ஓய்வூதிய பலன்களை பெறும் வசதி தற்போது
அறிமுகமாகி உள்ளது. இதற்கு, ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள்
பணிபுரியும் நிறுவனங்கள், இணையதளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க
வேண்டும். இதன் மூலம், அந்த ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய பலன்களை சுலபமாக பெற
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Very usefully to our employee thank you sir
ReplyDelete