சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே
தமக்கு தெரியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தகுதித் தேர்வு
தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே
தெரியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்த போது,
நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
நீட் தேர்வுக்க விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி
வருகிறது. நீட் விலக்கு கோரி தமிழக சட்டசபையில் மசோதா
நிறைவேற்றியிருப்பதையும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசு நீட் மசோதாவை ஒப்புதலுக்கு அனுப்பியும், அதை மத்திய அரசு
குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்திருப்பது ஏன் என்று
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,
தற்போது அந்த மசோதா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது குறித்து
விசாரித்து பதில் சொல்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக தகவல்
வருகிறது. இது குறித்து ஆய்வு செய்து மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு
எடுக்கும் என்று கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...