Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘நீட்’ தேர்வால் எங்களது மருத்துவ படிப்பு கனவு பலிக்காமல் போய்விட்டது என்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
 
 
இந்த நிலையில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் கலந்துகொண்ட பல மாணவ–மாணவிகள் நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல்போனதே என்று வேதனை தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த மாணவி ஷ்வானி கூறும்போது, ‘நான் கலந்தாய்வில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகே‌ஷன் என்ஜினீயரிங் பிரிவை தேர்வு செய்து இருக்கிறேன். ஆனால் என்னுடைய கனவு மருத்துவ படிப்பு தான். ஆனால் அந்த கனவை ‘நீட்’ தேர்வு தகர்த்துவிட்டது. நீட் தேர்வு தேவையற்ற ஒன்று. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ‘கட் ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் மாணவ–மாணவிகளை தேர்ந்து எடுக்கலாம். என்னைப்போல பல மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.
கலந்தாய்வில் 10–வது இடத்தை பெற்ற மாணவி காவியா கூறுகையில், ‘மருத்துவ படிப்பை படித்துமுடித்து டாக்டராக ஆவது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போதே அதை தீர்மானம் செய்தேன். அதற்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து படித்தேன். ஆனால் தற்போது நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்து என்னுடைய ஆசையை நிராசையாக்கிவிட்டது’ என்றார்.
கால்நடை மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து, என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு வந்த மாணவி கவுசிகா கூறும்போது, ‘நான் கால்நடை மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொண்டுள்ளேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் நீட் தேர்வு குழப்பத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கலாம். நீட் தேர்வுக்கு ஏற்றாற்போல், பள்ளி பாடத்திட்டங்களிலும் மாற்றம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.




6 Comments:

  1. நீட் தேர்வு குறித்து ஆளுக்கொருத்தராக கொதித்துக்கொண்டு பேசுவது எதனால் என்று புரியவில்லை.மொத்த MBBS சீட் ஏறத்தாழ 3500 தான் +2 படித்த அத்தனை பேரும் பருத்துவ கனவு தகர்ந்து வாழ்வே வீணாகிவிட்டது போல காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். குப்பனுக்கு சீட் கிடைக்கவில்லையெனில் சுப்பனுக்கு அவ்வளவுதான் ஆனால் அவனும்/அவளும் தமிழக மாணவர்கள் தான் ஐயா. தயவு செய்து நீட்டிற்கு எதிராக குறள் கொடுக்கிறோம் என்று தமிழனத்தை மேலும் மேலும் கேவலபடுத்த வேண்டாம். நாம் என்ன அறிவிலிகளா? பழம்பெருமை மட்டும் பேசினால் போதாது செயலில் காட்ட வேண்டும். நீட் ஒரு அருமையான வாய்ப்பு. இந்திய அளவில் காலுன்ற சரியான வாய்ப்பு. புத்தி இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் வெட்டி வீராப்பும் வெற்று சலசலப்பும் தேவையற்றது. தயவுசெய்து அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.நமக்கு கிடைக்கவில்லையெனில் தகுதிவாய்ந்த மற்றொரு தமிழனுக்குத்தான் கிடைக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இது நீட்டிற்கு மட்டும் அல்ல அனைத்து போட்டித்தேர்வுக்கும்தான். நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive