தொழில்நுட்ப வளர்ச்சியைக் காணும்போது ஒருபுறம் மகிழ்ச்சியும் வியப்பும் மனதில் தோன்றினாலும், மற்றொருபுறம் அது மக்களை சோம்பேறிகளாக
மாற்றுகிறதா என்கிற எண்ணம் எழுகிறது. அவ்வப்போது புதுமையான கருவிகள்
வெளியாகும்போது சில சிந்தனையாளர்கள் கூறிய கருத்து மனதில் தோன்றும்.
அதன்படி இந்தமுறை பல் துலக்கவும் நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவி வெளியானது
என்பதை அறியும்போது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1949ஆம் ஆண்டு வெளியான
‘நல்லதம்பி’ திரைப்படத்தில் ‘விஞ்ஞானத்தை வளர்க்க போறேன்டி’ என்று
தொடங்கும் பாடலில் ‘பட்டன தட்டி விட்டா, ரெண்டு தட்டுல இட்லியும் காபியும்
நம்ப பக்கத்தில் வந்திடணும்’ என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது.
10 விநாடிகளில் மொத்த பற்களையும் துலக்கக்கூடிய தானியங்கி டூத் பிரஷை அமெரிக்காவைச் சேர்ந்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி ரூ.7,300 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிர்வுகளைப் பயன்படுத்தி இயங்கும் இந்த டூத் பிரஷ், பாக்டீரியாக்களை எதிர்க்கக்கூடிய சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
டூத் பிரஷின் முற்கள் மென்மையான பொருள் கொண்டு உருவாக்கப்பட்டதால் ஈறுகளுக்கு எந்தப் பிரச்னையும் வராது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்காக பிரத்யேகமாக CAPSULE வடிவிலான டூத் பேஸ்ட் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் செயல்முறை குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...