தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்'
வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள்
விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவானது, தனியாக பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் உள்ளன. அரசு
உதவிகள் பெறும் வகையிலும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைக்கவும், அரசின்
இலவச திட்டப் பொருட்களை பெறவும், கூடுதல் மாணவர்கள் உள்ளதாக, கணக்கு
காட்டப்படுவதாக கூறப்படுகிறது.
'ஓபி'அதே போல, பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கே வராமல், வந்ததாக கணக்கு காட்டுவதாகவும், சில ஆசிரியர்கள் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ளோர், பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பதாகவும், அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவில் முறைகேட்டை தடுக்க, 'பயோ மெட்ரிக்' முறை கொண்டு வர,பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டது. ஆனாலும், இத்திட்டம் பல காரணங்களால், அமலுக்கு வராமல் இழுபறியாகி உள்ளது.இந்நிலையில், ஆசிரியர்கள் அதிகமாக, 'ஓபி' அடிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில், முதற்கட்டமாக, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
கணினியில் பதிவுஇதற்காக, பள்ளிகள் வாரியாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு விபரங்களை, தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப, இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.இந்த விபரங்களை கணினியில் பதிவு செய்யவும், ஆக., மாதத்திற்குப் பின், 'பயோ மெட்ரிக்' முறையை, முழு வீச்சில் அமல்படுத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...