Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலக பாரம்பரிய நகரமாகிறது ஆமதாபாத்!!

     இந்தியாவிலேயே முதல்முறையாக ஆமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.        யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டம் போலந்தில் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆமதாபாத் நகரை உலக பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.ஆமதாபாத்தை உலக பாரம்பரிய நகரமாக தேர்வு செய்யும் பரிந்துரைக்கு துருக்கி, போர்சுக்கல், தென் கொரியா, ஜிம்பாப்வே, க்யூபா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனையடுத்து அனைத்து மத ஒருங்கைணைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஆமதாபாத் நகரம் உலக பாரம்பரிய நகரமாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது.குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அகமது ஷாவால் கோட்டை நகரமாக அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி இங்கு 1915 முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். பாரிஸ், காரினோ, எடின்பர்க் உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து 287 வது உலக பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத் இணைந்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive