'அரசு அனுமதி கிடைத்ததும், சித்தா, ஆயுர்வேத படிப்பு களுக்கான விண்ணப்ப
வினியோகம் துவங்கும்' என, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. ஆனால், சித்தா
உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இந்தாண்டு, பிளஸ் 2
மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 'நீட்' தேர்வில்
குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வு எழுதாதவர்கள், இந்திய மருத்துவ முறை
படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இதற்கான விண்ணப்ப
வினியோகம் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
இது குறித்து, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் கூறியதாவது: இந்திய
மருத்துவ முறை படிப்புகள் உள்ள கல்லுாரிகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் அனுமதி
வழங்குகிறது. இதுவரை, அனுமதி பெற்ற கல்லுாரிகள் பட்டியலை வெளியிடவில்லை.
இருப்பினும், விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிக்கை, தயார் நிலையில்
உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும்,
வினியோகம் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போதைய சூழலில்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்த
பிறகே, இந்திய மருத்துவ முறை படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்'
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...