மருத்துவ
படிப்புகளின் சேர்க்கைக்கு, பிளஸ் ௨வில், முதல் முறையில் தேர்ச்சி பெற
வேண்டும்' என்ற கட்டுப்பாட்டால், தகுதியான மாணவர்கள் மருத்துவம் படிக்க
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளான, எம்.பி.பி.எஸ்., மற்றும்
பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல் தமிழகம் உட்பட அனைத்து
மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி கட்டாயமாகி உள்ளது.
இம்ப்ரூவ்மென்ட்தமிழகத்தில், மருத்துவ கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர, பிளஸ் ௨வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, விதிகளில் கூறப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன், பிளஸ் ௨வில் குறைந்த, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், 'இம்ப்ரூவ்மென்ட்' எனப்படும், மதிப்பெண் உயர்த்தும் தேர்வை எழுதி, அதில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்பில் சேர்ந்தனர்.
அதனால், கல்வித்தரம் குறைவதாக கூறி, இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டன. சில ஆண்டுகளாக, அரசு தேர்வுத்துறை மூலம், இம்ப்ரூவ்மென்ட் தேர்வே நடத்தப்படுவதில்லை.
பிளஸ் ௨ தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுத முடியாதோர், தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதோருக்கு மட்டுமே, சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.
பாரபட்சமானதுபெற்றோர் கூறியதாவது:பிளஸ் ௨ தேர்வு நடக்கும் காலம், கோடை காலம் என்பதால், அந்த நேரத்தில், சின்னம்மை நோய் தாக்கம் ஏற்படுகிறது. அதனாலும், விபத்து, குடும்பத்தில் விரும்பத்தகாத சம்பங்களால், தேர்வில் பங்கேற்க முடிவில்லை. இத்தகைய மாணவர்கள், மீண்டும் தேர்வில் பங்கேற்று, அந்த முதல் முயற்சி யிலேயே தேர்ச்சி பெறுவது உண்டு. அப்படிப்பட்ட மாணவர்கள் கூட, மருத்துவ சேர்க்கைக்கு தகுதி இல்லை என்பது, பாரபட்சமானது.அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் உள்ளது. எனவே, முதல் முயற்சியில் தேர்ச்சி என்ற விதிகளில் தெளிவான திருத்தங்கள் கொண்டு வந்து, அனைத்து தகுதியான மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...