சென்னை: அண்ணா பல்கலையின் தேர்வு அட்டவணை முன் கூட்டியே
அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா
வெளியிட்ட செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலையின், 627 இணைப்பு கல்லுாரிகளில்,
மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை
தயாரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, 45 முதல், 50 நாட்கள் வரை நடத்தும்
தேர்வுகள், இந்த ஆண்டு முதல், 28 முதல், 30 நாட்களாக
குறைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஜூலை, 3ல் வகுப்புகள் துவங்கியுள்ளன. அக்.,
21க்குள் வகுப்புகள் முடிக்கப்படும். அக்., 23 முதல், 28 வரை செய்முறை
தேர்வும், அக்., 30 முதல், நவ., 30 வரை எழுத்து தேர்வும் நடக்கும்.டிச., 17
வரை, விடுமுறை அளிக்கப்பட்டு, டிச., 18ல் அடுத்த வகுப்புகள் துவங்கும்.
இதை, கல்லுாரிகள் சரியாக கடைபிடிக்க வேண்டும்; தவறினால் நடவடிக்கை
எடுக்கப்படும். இந்த விபரங்களை, aucoe.annauniv.edu இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...