''பள்ளிகளில், திருவள்ளுவர் சிலை வைப்பது
தொடர்பாக, மாணவர்களிடம், எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது,'' என, பள்ளி
நிர்வாகிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு
உள்ளார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளின்
வளாகங்களில், வெண்கல திருவள்ளுவர் சிலை வைக்கலாம் என்றும், ஜாதி, மதங்களை
கடந்து, திருக்குறள் பயன்படுத்தப்படுவதால், திருக்குறள் குறித்த
விழிப்புணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்தலாம் என்றும், பள்ளிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, சில தனியார் பள்ளிகளில்,
மாணவர்களிடம் வசூல் நடப்பதாக, புகார் எழுந்தது. அதற்கு எச்சரிக்கை
விடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், புதிய சுற்றறிக்கையை, நேற்று
பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார். அதில், 'அந்தந்த பள்ளிகளின் விருப்பப்படி,
திருவள்ளுவர் சிலையை வளாகங்களில் நிறுவி கொள்ளலாம். இதற்காக, மாணவர்களிடம்
எந்த நிதியும் வசூலிக்கக் கூடாது' என, கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...