தரையிலிருந்து பாய்ந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடிய குறுகிய தூர
அதிவேக ஏவுகணையை இந்தியாவின் இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூர் அருகே சோதனை செய்யப்பட்டது.
இரண்டாவது முறையாக இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை காலை 11.25 மணியளவில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணையின் முதல் சோதனை ஜூன் 4 அன்று இதே இடத்தில் நடந்தது. இந்த ஏவுகணை நிமிடத்திற்கு 25 முதல் 30 கி.மீ., வரை பாய்ந்து, ஒரே சமயத்தில் பல இலக்குளை குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...