அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு பருவகால தேர்வுகளும், ஒழுங்காகவும் மிகுந்த கவனத்தோடும் நடத்தப் பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் செய்முறைத் தேர்வுக்கும், எழுத்துத் தேர்வுக்கும் ஆண்டின் தொடக்கத்திலேயே கால அட்டவணை வெளியிடப் படும். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன் அவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக முடியும்.
நடப்பு பருவகால தேர்வுக் கால அட்டவணை:
(ஜூலை- நவம்பர் 2017)1. இறுதித் தேர்வுகள் அட்ட வணை வெளியீடு - ஜூலை 24, கடைசி வேலை நாள் - அக்டோ பர் 21, செய்முறைத் தேர்வுகள் - அக்டோபர் 25 முதல் 28 வரை, இறுதித்தேர்வுகள் - அக்டோபர் 30 முதல் நவம்பர் 30 வரை, விடுமுறை - டிசம்பர் 17 வரை, அடுத்த பருவம் தொடங்கும் நாள் - டிசம்பர் 18, தேர்வுகளை டிசம்பர் 18-ம் தேதிக்குள் முடிப்பதால் மாணவர்களுக்கு 2 வாரம் முதல் 4 வாரங்கள் வரை குளிர்கால விடுமுறையும், 4 வாரம் முதல் 6 வாரம் வரை கோடைகால விடுமுறையும் கிடைக்கும். பல்கலைக்கழகம் அளித்துள்ள பாடம் மற்றும் மதிப்பீடு அட்டவணைகளை அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
தவறும் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இறுதி தேர்வுகளுக்கான கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) காணலாம். பிற தேர்வுகளுக்கான கால அட்டவணை வருகிற 24-ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி.
காலங்கள் காற்றாய் பறக்குது!
சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
கவர்மண்டு காலால் மிதிக்குது!
கொடநாடு காரர்
கொடுக்காமல் போனதால் ,
மாநாடு கூட்டுவோம்.
நாம்
யாரென காட்டுவோம்.
நம்
அழுகைக்கு தேவை சலுகை
எட்டு மதிப்பெண் கேட்பதால்
பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
எட்டாம் தேதி என்பதால்,
இதுவும் ஆகஸ்ட் புரட்சி
திணரட்டும் திருச்சி.
நமது கோரிக்கைகள்;
1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.
கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224
தேனி திரு.தினகரன் 📞9585655579
மதுரை திரு.ராஜேஷ் 📞8344718505
திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் 📞9025342468
தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610
தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422
கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210
சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224
நெல்லை திரு முருகேசன் 📞 9500959482
திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417
சென்னை திரு ஆசிக் 📞7010717988
விருதுநகர் சங்கர் 📞9626580093
புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333
வேலூர் திரு தினேஷ் 📞9025938592
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465