தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு
சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர்
ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பேசினோம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அதில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை
அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக
20 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். 7-வது
ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்,
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், தொழில் வரி
ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விரிவாக
விவாதித்தோம்.
இடைக்கால நிவாரணம் குறித்து அரசு
அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை
அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்ற பிறகு, அந்த திட்டத்தை
ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராயும் என்று உறுதி
அளித்துள்ளார்.
மாநிலத்துக்கான 7-வது ஊதியக்குழு
அறிக்கைகளைப் பெற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பரிந்துரைகளை
அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள்,
தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அதுபோன்ற அனைத்துவகை
பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில்
அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி
பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. விரைவில் இதற்கான அரசாணைகளையும் அவர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
This comment has been removed by the author.
ReplyDelete