Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு இதற்கெல்லாம் கூடவா அலவென்ஸ் கொடுப்பார்கள்?


நிதி அமைச்சகம் 7வது சம்பள கமிஷனின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அலவென்ஸ் எனப்படும் கொடுப்பனுவுகளை அறிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனுவுகளில் பலவற்றுக்குத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
என்ன தான் திருத்தப்பட்டு இருந்தாலும் தனியார் நிறுவன ஊழியர்களை விட அரசு ஊழியர்களுக்கு எதற்கெல்லாம் கொடுப்பனுவுகள் அளிக்கப்படுகின்றது என்று இங்குப் பார்ப்போம். இந்தப் பட்டிலைல் சில வற்றைத் திருத்தியுள்ளனர், சிலவற்றை நீக்கி உள்ளனர். அந்தப் பட்டிலில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.
 மிதிவண்டி அலவென்ஸ்
தபால் நிலையங்கள் பல் கிராமங்களுக்கு அருகில் உள்ள சிறு நகரங்களில் துவங்கப்படும் போது அவர்களுக்கு வரும் தபால்களைக் கொண்டு சேர்வதற்கு ஒரு காலத்தில் மிதி வண்டிகள் தான் பெறும் அளவில் பயன்பட்டு வந்தன.
7வது சம்பள கமிஷனின் கீழ் அமைக்கப்பட்ட குழு இதனை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தது. ஆனால் ஏற்கனவே வழங்கி வந்த மாதத்திற்கு 90 ரூபாய் என்ற மிதிவண்டி அலவென்ஸ் தொகையினை 180 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அலவென்ஸ் ரயில்வே உள்ளிட்ட சில துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் நெடுந்தொலைவு சென்று பணிப்பிரிய வேண்டியவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.
   பிரீஃப்கேஸ் கொடுப்பனவு
பிரீஃப்கேஸ் எனப்படும் பெட்டிக்கும் கொடுப்பனவு அளிக்கப்படுகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? சில பிரிவை சார்ந்த அரசு ஊழியர்கள், குறிப்பாகப் பாதுகாப்புத் துறை சார்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இந்தக் கொடுப்பனுவுகளின் கீழ் அலுவலகப் பை, பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ் உள்ளிட்டவையும் வாங்கலாம். மூன்று வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்தக் கொடுப்பனுவுகள் 10,000 ரூபாய் வரை அதிகபட்சமாக அளிக்கப்படுகின்றது. இதனை அப்படியே தொடர பரிந்துறைக் குழு வைத்த கோரிக்கையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
   கழிப்பறை சோப்புக் கொடுப்பனவு
கழிப்பறை சோப்புக் கொடுப்பனவு பிரிவு பி மற்றும் சி சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. மாதம் 90 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த இந்தக் கொடுப்பனுவை 7வது சம்பள கமிஷன் நீக்கிவிட்டுக் கலப்புத் தனிப்பட்ட பராமரிப்பு கொடுப்பனவுடன் வழங்க பரிந்துரைத்த கோரிக்கையினை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அவ்வாரே வழங்கவும் முடிவு செய்துள்ளது.
 
புத்தகம் கொடுப்பனவு
புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இந்த ஸ்மார்ட்போன் உலகிலும் புத்தகம் இல்லாமல் வாழ முடியாது. இந்திய வெளியுறவு சேவை துறை ஊழியர்களுக்கு ஒரு முறை கொடுப்பனவாக வழங்கப்படும் 15,000 ரூபாயினை 7வது ஊதிய குழு பரிந்துரைத்ததின் படி அப்படியே தொடர்ந்து அளிக்க அரசு ஒப்புக்கொண்டது.
இரகசியக் கொடுப்பனவு
இரகசிய ஆவணங்கள் தொடர்பாக அமைச்சரவை செயலகத்தில் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதோடு, 'கடமை உணர்ச்சியற்ற மற்றும் கடினமான தன்மை உடையது'. இது இரகசியமாக இருப்பதால், இதன் கீழ் எவ்வளவு கொடுப்பனவு அளிக்கப்படுகின்றது என்பதும் இரகசியமாகவே உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive