புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் 3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இயக்குநர் பதவியை உருவாக்குதல், துணை ராணுவ படைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயதினை அதிகரித்தல் போன்ற விசயங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
அதன்படி, மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணியாற்றும் பொது மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் ஆகியோரது ஓய்வு வயது 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது.
இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை, தேசிய பேரிடர் மேலாண்மை படை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் சஹஸ்திர சீமா பல் ஆகிய மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பலனடைந்திடுவார்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...