வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், ‘‘வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்க வேண்டும் என சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ.வும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.சி.வீரமணியும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப்படி தொடங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...