5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு, விரைவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
5 முதல் 8-ம் வகுப்பு வரை பயில்பவர்கள் கண்டிப்பாக தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்கிற முறை முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்படி, மார்ச் மாதம் ஒரு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால், அவருக்கு மே மாதம் மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
அப்போதும் அவர் தோல்வி அடைந்தால் மட்டுமே, அவர் அதே வகுப்பில் மீண்டும் படிக்க அமர்த்தப்படுவார். இது தொடர்பான மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16-ன்கீழ் கட்டாயத் தேர்ச்சி என்ற கைவிடப்படுகிறது. மேலும், மாணவர்களை 8-ம் வகுப்பு வரை பள்ளியில் இருந்து நீக்குவதும் தடை செய்யப்படுகிறது.
குழந்தைகளை தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைப்பது அவர்களை மனச்சோர்வடையச் செய்யும், சில நேரங்களில் பள்ளிப்படிப்பை கைவிட வேண்டியது இருக்கும் என்பதால் கட்டாயத் தேர்ச்சி கொண்டு வரப்பட்டது. ஆனால், சில மாநிலங்கள் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்டாயத் தேர்ச்சி முறையால்,மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது என்று கவலைகொண்டன. இதையடுத்து இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...