Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அரக்கோணம்:
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி (அரக்கோணம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். கல்வியில் செய்துள்ள மாற்றத்தால் அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகும் நிலை வரும் காலங்களில் ஏற்படும்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வித்துறையில் செய்துள்ள மாற்றத்தால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.




15 Comments:

  1. Tet pass panuvangal ethani per

    ReplyDelete
  2. First released 748 Post of computer science teacher vacancy.. And Go order.....?????

    ReplyDelete
  3. How is it possible 40000 thousands teacher vacancy filled.....in computer science teacher ....,.this obviously this is for advertising news..... . that's fake news........?

    ReplyDelete
  4. நம்பும்படி ஏதாவது சொல்லுங்கள்! முதலில் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி மாணவர்களின் எதிர் காலத்திற்கு வழிகாட்டுங்கள்!

    ReplyDelete
  5. அள்ளி விடுங்கள் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள்.மேல் நிலைப் பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கலை நிரப்பி மாணவர்களின் எதிர் காலத்தைக் காப்பாற்றுங்கள்!

    ReplyDelete
  6. Good Anitha good questions.... !

    ReplyDelete
  7. no only 40 seats will be filled up in govt hrsec schools shortly
    thats true

    ReplyDelete
    Replies
    1. No no only 4 seat availability shortly announced

      Delete
  8. no not 4 seats available
    conform news 57 seats available In 138 priority seats only 79 seats(dw icm) filled up dec 2016
    59 seats including PH seats available
    only 6 ph seats cause in madras high court

    ReplyDelete
  9. சும்மா அள்ளி விடுங்க பாஸ், தமிழ் நாட்டுல படிச்சவனும் படிக்காத்தவன் எல்லாம் ஒன்னு தான், நீங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க,

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive