பி.எட்.,
கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக, ௬,௨௦௦ பேர் விண்ணப்பம்
பெற்றுள்ளனர்.தமிழகத்தில், ௧௪ அரசு கல்வியியல் கல்லுாரிகள், ஏழு அரசு உதவி
பெறும் கல்லுாரிகள் என, ௨௧ கல்வியியல் கல்லுாரிகளில், ௧,௭௭௭ இடங்களில்,
பி.எட்., மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, தமிழக அரசு சார்பில்,
லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த
ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், ௨௧ல் விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று
முடிந்தது. மொத்தம், ௬,௨௦௦ பேர் விண்ணப்பம் பெற்று உள்ளனர்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன், வரும், ௩ம் தேதிக்குள், லேடி வெலிங்டன்கல்லுாரிக்கு அனுப்ப வேண்டும் என, மாணவர் சேர்க்கை செயலர், கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன், வரும், ௩ம் தேதிக்குள், லேடி வெலிங்டன்கல்லுாரிக்கு அனுப்ப வேண்டும் என, மாணவர் சேர்க்கை செயலர், கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...