தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலில்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும்
மறுமதிப்பீடு முடிந்த நிலையில், இன்று(ஜூலை 10) முதல், அசல் மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியர் தாங்கள் படித்தபள்ளிகளுக்கு சென்று, காலை, 10:00 மணி முதல்,
தலைமை ஆசிரியரிடம் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம். தனித்தேர்வர்கள்,
தங்கள் தேர்வு மையங்களில், மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த சான்றிதழின்
படி, தங்கள் வேலை வாய்ப்பு பதிவையும், பள்ளிகளில், ஆன்லைனில் மேற்கொள்ள
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 24ம் தேதி வரை, ஒரே பதிவு மூப்பில்,
பெயர் விபரங்கள் பதிவு செய்யப்படும்.
சான்றிதழ் பெறும் மாணவர்கள், 10ம் வகுப்பில் பதிவு செய்திருந்தால், அந்த
வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் நகல், தொலைபேசி
எண் போன்ற விபரங்களுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும்.மேலும், மாவட்ட வேலை
வாய்ப்பு அலுவலகங்களிலும், tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்திலும்,
வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம் என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை
அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...