தங்கம் விலை தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இதன்மூலம் தங்கம் விலை ரூ.21 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 11-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,623-க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.20,984-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,960-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.38.60-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.36,040-க்கும் விற்பனையாகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...