``திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு,
தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களாக பணியாற்ற முடியாது” என துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் செய்தி யாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி களில் உள்ள கட்டமைப்பு களையும், அடிப்படை வசதி களையும், ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பிஎச்டி முடித்திருக்க வேண்டும் அல்லது நெட், ஸ்லெட் தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியில்லாதவர்கள் வரும் 2018-19-ம் கல்வியாண்டில் கல்லூரிகளில் பணியாற்றும் வாய்ப்பை இழப்பார்கள்.பல்கலைக்கழகத்தால் நடத்தப் படும் அனைத்து பாடப்பிரிவு களையும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திலிருந்து கூடுதலாக 2 ஆண்டுக்குள் மாணவ, மாணவியர் படித்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீண்டும் அப்பாடப்பிரிவில் சேர்ந்து பயில வேண்டும்.
இடங்கள் அதிகரிப்பு
தற்போது, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் கல்வி பயில மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் நடப்புக் கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள அனைத்து அரசு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும், அனைத்துஇளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பட்டமளிப்பு விழா
பல்கலைக்கழகத்தில் பயிலும் திருநங்கையருக்கு கல்விக் கட்டணத்தில் முழுவிலக்கு அளிக்கப்படும். அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டு பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு என்பதால் ஒரே இடத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படும். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க குடியரசுத் தலைவர் அல்லது பிரதமரை அழைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்
Already recent ah appoint anavagakkulukkum net or set compulsory nu sollanum..because PhD all done easily nowadays...exam determines the knowledge...
ReplyDeleteAlready recent ah appoint anavagakkulukkum net or set compulsory nu sollanum..because PhD all done easily nowadays...exam determines the knowledge...
ReplyDeleteAs per UGC recent amendment, it is mandatory to clear NET/SLET even if a person has completed Ph.D. So Tamil Nadu Government should follow UGC guidelines.
ReplyDeleteTRB has advertised its annual planner. It seems they will prefer only the existing cut-off method (for 34 marks) for the recruitment of assistant professors. They should opt for the conduct of a competitive written examination.
ReplyDelete