டிப்ளமா,
பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து
படிப்பதற்கான கவுன்சிலிங், நேற்று காரைக்குடியில் துவங்கியது.
கவுன்சிலிங்கை, நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ துவங்கி வைத்தார். காலை, 8:00
மணிக்கு, விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில்
ஒதுக்கப்பட்ட, 20 இடங்களை தேர்வு செய்ய, 20 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட, 940 இடங்களுக்கு, 32 பேர் மட்டுமே
பங்கேற்றனர்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான, 30 இடங்களுக்கு, 28 பேரும், லெதர் மற்றும் பிரின்டிங் பிரிவில், தலா, ஐந்து பேரும் பங்கேற்றனர்.இன்று, கெமிக்கல், டெக்ஸ்டைல் பிரிவுக்கும், தொடர்ந்து, சிவில் பிரிவுக்கு, 3-ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. 3- முதல், 7 -வரை மெக்கானிக்கல், 7 முதல், 10 வரை எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கும், 10-ம் தேதி, பி.எஸ்சி., முடித்தவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.
நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறுகையில், ''இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை, 3-ல் கல்லுாரி துவங்குகிறது. சேர்க்கை கடிதம் பெற்றவர்கள், ஜூலை, 14-க்குள் கல்லுாரியில் சேரலாம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...