புதுக்கோட்டை: ''மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திட்டமிட்டபடி 17ம்
தேதி துவங்கும்,'' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: ஜப்பான் நிதி உதவியோடு 1,634 கோடி
ரூபாய் மதிப்பில் 'ஜெய்கா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் உலக
தரம் வாய்ந்த சிகிச்சை கிடைக்கும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருந்த
சர்ச்சை தற்போது நீங்கியுள்ளது. எனவே
திட்டமிட்டபடி 17ம் தேதி கவுன்சிலிங் துவங்கும். மாநில அரசின்
அதிகாரத்திற்கு உட்பட்டு தான் 'நீட்' தேர்வு இருந்தாலும் 85 சதவீதம் மாநில
பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ., பாடத்
திட்டதில் படித்தவர்களுக்கும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்த
வழக்கில் தமிழக அரசிற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதை நிலைநாட்ட
தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...