இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125-வது ஆண்டு
விழாவை குறிக்கும் வகையில்
இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் மத்தியில் அசோகா தூணில் சிங்க முகமும், அதற்கு கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் ‘பாரத்’ என்று தேவநாகரியிலும், வலது பக்கம் ‘இந்தியா’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் ரூபாயை குறிக்கும் குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது எண்ணிலும், நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவண காப்பக கட்டிடத்தின் உருவப்படம் மத்தியிலும், உருவப்படத்தின் கீழே ‘125’ என்று ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.
125-வது ஆண்டு கொண்டாட்டங்களின் சின்னம், தேசிய ஆவண காப்பக கட்டிட உருவப்படத்திற்கு மேல்புறம் ‘இந்திய தேசிய ஆவண காப்பகம்’ என்று தேவநாகரியிலும், கீழ்புறத்தில் தேசிய ஆவண காப்பகம் என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். மேலும், உருவப்படத்தின் இடது மற்றும் வலதுபுறம் முறையே மேல்பக்கத்தில் ‘1891’ மற்றும் ‘2016’ என்று ஆண்டு, எண்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.
2011-ம் ஆண்டு இந்திய நாணய சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் செல்லத்தக்கவை.
Irukkkarathukku enna vali
ReplyDelete