சென்னை:'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை'
என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
தெரிவித்துள்ளது.
குரூப் - 1, தேர்வு, முறைகேடு, இல்லை, டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 1
தேர்வில், தேர்வு மையங்கள் தோறும், வினாத்தாள், விடைத்தாள் வழங்குவது,
தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை கட்டி, பாதுகாப்பாக முத்திரையிட்டு
ஒப்படைப்பது வரை, அனைத்தும், வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். விடைத்தாள்களின்
எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, பின், கலைக்கப்பட்டு, விடைத் தாள்களில்,
பதிவெண்கள் மறைக்கப்பட்டு, டம்மி எண்கள்இடப்படும்.
எந்த விடைத்தாள், யாருடையது என்பது மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. விடை
திருத்தும் மதிப்பீட்டாளர்களுக்கோ மற்றும் தேர்வாணைய அலுவலர்களுக்கோ,
யாருடைய விடைத்தாள் எது என்பது தெரியாது.
அனுபவமிக்க மதிப்பீட்டாளர்களைக் கொண்டு, ஒவ்வொரு விடைத்தாளும், வெவ்வேறு
மதிப்பீட்டாளர்களால், இருமுறை மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால்
மூன்றாவது மதிப்பீடும் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு நிலையிலும், விடைத்தாள் திருத்தும் பணி மிக நம்பகத்தன்மையுடனும்,
பாதுகாப்புட னும், சந்தேகம், விதி மீறலுக்கு இடமின்றி நடக்கிறது. பின்,
தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வு முடிவு
வெளியிடப்படுகிறது.
தேர்வாணைய தலைவர் விடுப்பில் செல்வதற்கும், குரூப்- - 1 தேர்வு முடிவு வெளியிடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வேலையற்ற இளைஞர்களுக்கு, தேர்வாணை யம் நம்பிக்கையூட்டும் நிறுவனமாக விளங்கு
கிறது. எனவே, ஆதாரமற்ற செய்திகள், இளைஞர்களின், குறிப்பாக தேர்வர்களின்
மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மத்தியில் மிகுந்த மன
உளைச்சலையும், விரக்தியையும் ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Interview ல 7 lakhs கேட்டு வாங்கி, அப்புறமா தான் posting order அ கொடுத்தானுங்க.All are fraud in TNPSC.
ReplyDeleteExam nalla nadantaalum amount vaangitu taan order kodukaranunga
ReplyDeleteநெருப்பில்லாமல் புகையாது...!
ReplyDelete