மேஷம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம்
பொங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்திகள்
வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ரிஷபம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட
நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புது
ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மிதுனம்
சில
வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம்
தேவை. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
கடகம்
தன்னிச்சையாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால்
லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
சிம்மம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தோற்றப்
பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம்
பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது
தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கன்னி
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.
குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்களைப் பற்றி வீண்
விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது.
உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
துலாம்
விடாப்பிடியாக
செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும்
தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள்.
திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி
வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
விருச்சிகம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி
வருவார். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை
மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
தனுசு
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக
நடந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று
வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
மகரம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு
பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி
செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கும்பம்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில்
உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.
மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விமர்சனங்களை கண்டு
அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மீனம்
உங்கள்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.
மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல
செய்தி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி
மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...