- மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். உறவினர்கள் பாராட்டுவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கடகம்
கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். -
கன்னி
கன்னி: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சகோதர வகையில் விவாதம் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். -
துலாம்
துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள். -
தனுசு
தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள். -
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
-
கும்பம்
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள். -
மீனம்
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» Today Rasipalan 29/06/2017
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...