மேஷம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும்.
குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால்
நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக
பேசுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
திட்டமிட்ட
காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன்
அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை
தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில்
சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
எதிலும்
வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த
பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத்
தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள்,
உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி
செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப்
போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத
உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில்
மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
சந்திராஷ்டமம்
தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்கள் மனசு
காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம்
ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை
பிறக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில்
சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்
எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள்
அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை
அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பால்ய நண்பர்கள்
உதவுவார்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில்
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத்
தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர்கள்
ஒத்துழைப்பார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்
வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...