மேஷம்
உங்கள்
செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை
நாடுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ரிஷபம்
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக
வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உடல் நலம் சீராகும்.
வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
மிதுனம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர்
குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக் கூடும்.
யாருக்காகவும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில்
வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப்
பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
கடகம்
சவாலான
வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.
விரும்பி பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம்
கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
சிம்மம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.
உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
கன்னி
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை குறையும்.
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
துலாம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். கடனாக கொடுத்த
பணத்தை போராடி வசூலிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை
தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
விருச்சிகம்
தைரியமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
தனுசு
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். அழகு, இளமைக் கூடும். பணவரவு திருப்தி தரும்.
நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி
உண்டாகும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
மகரம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்.
குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை
ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்.
உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
கும்பம்
விடாப்பிடியாக
செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப்
போங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில்
போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
மீனம்
எதிலும்
வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக
நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புதுத் தொழில்
தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...