சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் விலக்கு: ஜாக்டா அமைப்பு அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கை குழு (ஜாக்டா) சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன்
மற்றும் நிர்வாகிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளரை
தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது ஆசிரியர்களுக்கான
கோரிக்கைகள் குறித்த மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுப் பள்ளியில்
கடந்த 2011ம் ஆண்டு ஒரே அரசாணையின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட 3200
பட்டதாரி ஆசிரியர்களில் 500 சிறப்பு பிரிவு(கலப்பு மணம் புரிந்தோர்,
கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்,
மாற்றுத் திறனாளிகள்) ஆசிரியர்களுக்கு மட்டும் சான்று சரிபார்ப்பில்
காலதாமதம் ஏற்பட்டதாக கூறி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று
பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு
எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 15 ஆண்டுக்கு மேல் இடைநிலை
ஆசிரியர்களாக பணியாற்றுவோரில் தகுதி உள்ளவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி
உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...