சென்னை: ''பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை, அரசு
மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி
வலியுறுத்தினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மத்திய
அரசு, கல்வித்துறைக்கு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது; அதை பெற முயற்சி
செய்யுங்கள்.அமைச்சர் ஜெயகுமார்: மத்திய அரசிடம் இருந்து, 17 ஆயிரம் கோடி
ரூபாய், நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது.
இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து முதல்வர் வலியுறுத்தி
உள்ளார். நிதி அமைச்சரிடமும் பேசி உள்ளோம். கேட்ட நிதி கிடைத்துவிடும்
என்ற, நம்பிக்கை உள்ளது.பொன்முடி: புதிதாக பிளஸ் 1 வகுப்பிற்கும,் பொதுத்
தேர்வு நடத்தப்படும் என, அறிவித்துள்ளீர்கள். அதை, மறுபரிசீலனை செய்ய
வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஓராண்டு
இடைவெளி விட வேண்டும். ஏனெனில், மீண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத
வேண்டி உள்ளது.அமைச்சர் செங் கோட்டையன்: பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என்பதை,
அனைவரும் வரவேற்றுள்ளனர்; மக்கள் ஏற்றுக் கொண்டனர்.பொன்முடி: மாநில உயர்
கல்வி மன்றம், நிர்வாகிகள் இல்லாமல் முடங்கி உள்ளது. துணை வேந்தர்
நியமனத்தில், பல்வேறு குளறுபடி நடந்துள்ளது.அமைச்சர் அன்பழகன்: துணை
வேந்தர் தேர்வில், குளறுபடி எதுவும் இல்லை.
தேடல் குழு தேர்வு செய்தவர்கள் தான், துணை வேந்தர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர். பதவி கிடைக்காதவர்கள், தவறான பிரசாரம்
செய்கின்றனர்.பொன்முடி: மேற்கு வங்க கவர்னராக வந்த ராபர்ட் கிளைவ், அங்கு
ஆட்சியிலிருந்த, நவாப்புகளிடம் இருந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்தி,
ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தார். அதுபோன்ற நிலை ஏற்படாமல்,
பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...