மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணை
சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில்
நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி, பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு
நடத்தாததற்கு என்ன காரணம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து அதிக
கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன, கல்வித்தரம் இல்லாதநிலையில் நீட்
தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். கிராமங்கள் மற்றும்
நகரங்களுக்கும் கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ தேர்வை
எப்படி எதிர்க்கொள்ள முடியும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...