Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IIT Exam - Girls Lagging

ஐ.ஐ.டி., தேர்வில் பின்தங்கும் மாணவியர்

இந்திய தொழிற்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதிலும், தேர்ச்சி பெறுவதிலும், மாணவியர் தொடர்ந்து பின்தங்கி வருகின்றனர். ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டு எழுதிய மாணவியர் சதவீதம், முந்தைய ஆண்டை விட சற்று உயர்ந்தது;
ஆனாலும், தேர்ச்சி குறைந்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு தேர்வில் பங்கேற்ற, ௧.59 லட்சம் பேரில், 23 சதவீதமான, 30 ஆயிரம் பேர் மாணவியர். இவர்களில், 23 சதவீத அளவான, 7,137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில், தேர்வு எழுதிய மாணவர்களில், 67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த, 2016ல் தேர்வு எழுதிய, 1.47 லட்சம் பேரில், 23 சதவீதமான, 27 ஆயிரம் பேர் மாணவியர். இவர்களில், 16 சதவீதமான, 4,570 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இது குறித்து, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி மையத்தினர் கூறியதாவது: பிளஸ் 2 முடிக்கும் மாணவியரில் பலர், மருத்துவம், ஆசிரியர் பயிற்சி சார்ந்த படிப்புகளை தேர்வு செய்கின்றனர். மேலும், ஐ.ஐ.டி., போன்ற தங்குமிட வசதி உடைய, ஆராய்ச்சி சார்ந்த படிப்பு
களுக்கு, மாணவியரை பெற்றோர் அனுமதிக்காததும், முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




2 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Please avoid spelling mistakes & grammatical errors in English titles-lacking is different from lagging

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive