தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா?
தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு பள்ளியில் தொடங்கிய ஆங்கிலவழி வகுப்புகளை தமிழ்வழி ஆசிரியரே நடத்துகிறார் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பகுதி நேர தொழில் செய்வது வேதனை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை அரசு கட்டாயம் ஆக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்பை நடத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு வராத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ளார். மேலும் ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்க கூடாது ? ஆசிரியர்களின் வருகையை CCTV கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன் என்றும் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Oru aasiriyarae 6 subject nadathuvar. So NEET exam pass. MBBS Seat ??????? 11 bot zoo bio 12 bot zoo bio 6 subject.
ReplyDeletenot only govt school teachers - al govt staffs children must join govt schools including lawyers n judges
ReplyDelete