ஆசிரியர் பயிற்சி 'டிப்ளமா' 11 ஆயிரம் இடங்கள் காலி
பள்ளிக்கல்வித்
துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள்
காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை
கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ.ஆர்.டி., என்ற, மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது. இவற்றின் கீழ், மாநிலம் முழுவதும், அரசு,
அரசு உதவி மற்றும் தனியார் என, 463 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
செயல்படுகின்றன.
இவற்றில், இரண்டு ஆண்டு, டி.டி.எட்., என்ற, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர்வதற்கான, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு, 'ஆன்லைன்' முன்பதிவு அறிமுகமாகிறது. இதற்கு, www.tnscert.org என்ற இணையதளத்தில், வரும், 21 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமுள்ள, 12 ஆயிரம் இடங்களுக்கு, நேற்று முன்தினம் வரை, 1,063 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். இன்னும், 200 பேர் வரை மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு, 90 சதவீதமான, 11 ஆயிரம் இடங்கள் காலியாகும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தால், இடைநிலை ஆசிரியருக்கான, 'டெட்' தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றாலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. டிப்ளமோ முடித்த பின், பி.ஏ., - பி.எஸ்சி., போன்ற பட்டப்படிப்பிலும், பின், பி.எட்., படிப்பிலும் சேரலாம். மாணவர்கள் நேரடியாக பட்டப்படிப்பு படிக்க விரும்புவதால், டிப்ளமோ படிப்புக்கான ஆர்வம் குறைந்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...