விபத்து
ஏற்படுத்திய டிரைவர்களின், ஓட்டுனர் உரிமத்தின் தகுதி இழப்பை ரத்து செய்ய,
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை, அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களின், ஓட்டுனர் உரிமத்தை, தகுதி இழப்பு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு, தகுதி இழப்பை ரத்து செய்ய, சில தெளிவுரைகளை வழங்கி உள்ளது...
விபத்து ஏற்படுத்திய டிரைவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில், இரண்டு நாட்கள், தன் சொந்த செலவில், புத்தாக்க பயிற்சி பெற வேண்டும். அதற்குரிய சான்றிழை பெற்று, உரிமம் வழங்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம், சமர்ப்பிக்க வேண்டும்
விபத்து ஏற்படுத்திய டிரைவர்கள், ஓட்டுனர் உரிமத்தை தகுதி இழப்பு செய்யும் முன், அரசு மருத்துவமனையில், உரிய அலுவலர் முன் ஆஜராகி, உடல் தகுதி குறித்த மருத்துவ சான்றிதழைப் பெற்று, சமர்ப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...