Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Do you Know American Education System?

அமெரிக்காவில் உள்ள கல்வி முறை பற்றி தெரியுமா ஆசிரியர்களே?

 
தேவகோட்டை – அமெரிக்க அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு வருடமும் 10 மணி நேரம் பிள்ளைகளுக்காக பள்ளியில் நேரம் செலவிட வேண்டும் என்று முகநூல் நிர்வாக அலுவலர் மாணவர்களிடம் பள்ளியில் பேசினார்.

 
                    மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை வள்ளியப்பன்,செந்தாமரை ஆச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமெரிக்க வாழ் இந்தியரான முகநூல் நிர்வாக பிரிவில் பணியாற்றும் ராம் வள்ளியப்பன் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து பேசும்போது, அமெரிக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  பெற்றோர்கள் ஒவ்வொரு வருடமும் 10 மணி நேரம் பிள்ளைகளுக்காக பள்ளியில் நேரம் செலவிட வேண்டும்.பெற்றோரும் சேர்ந்து படிப்பது போன்று ஒரு கலாச்சரம் உள்ளது.நான் இங்கு தமிழகத்தில் படிக்கும்போது என் பெற்றோர் என்னை பள்ளியில் மட்டுமே சேர்த்தனர்.ஆனால் அமெரிக்காவில் அரசு மற்றும் அனைத்து வகையான பள்ளிகளில் படிக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக வருடத்துக்கு 1௦ மணி நேரம் தங்களால் இயன்ற உதவிகளை பள்ளிக்கு செலவளித்தே ஆக வேண்டும் . எனக்கு கடந்த ஆண்டு பள்ளிக்கு வரும் வாகனங்களை வரிசைபடுத்தும் பணியை நானும்,எனது மனைவியும் செய்து முடித்தோம்.ஆசிரியர்கள் கல்வி திட்டத்தை எங்களிடம் கொடுத்து விடுவார்கள்.பெற்றோர்களில் ஒருவரே பள்ளியில் சென்று தேர்வு வைத்து மாணவர்களின் நிலையினை எடுத்து சொல்லி ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்வார்கள்.
                            கணினி வழி கல்வி சொல்லி கொடுப்பது அதனில் கேள்விகள் கேட்பது ,தேர்வு வைப்பது இவற்றையும் பெற்றோர்களே பார்த்து கொள்வார்கள்.களபயணம் செல்வது அங்கு கட்டாயம்.அதற்கான ஏற்பாடுகளை ஒரு பெற்றோரே பொறுப்பு எடுத்து செய்ய வேண்டும்.நான் சொல்வது அனைத்தும் அரசு பள்ளியில் நடைபெற்று வருகிறது.
                                  கல்வி முறை  இங்கு உள்ளது போன்று தான் முதல் வகுப்பு முதல் அங்கு கல்லூரி வரை உள்ளது. பள்ளி நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டில் முதல் வகுப்பு முதல் நல்ல ஆழ்ந்த கல்வியை அரசு ஏற்பாடு செய்து உள்ளது.ஆனால் அமெரிக்காவில் தொடக்க நிலை மிக மெதுவாக இருக்கும்.மிடில் நிலையில் அதிக அழுத்தம் இருக்கும்.அதனை பார்க்கும்போது நமது கல்வி முறை நன்றாக உள்ளது.நீங்கள் கொடுத்து  வைத்தவர்கள். இங்கு உள்ளது போன்று தேர்வுகள் கிடையாது.அமெரிக்காவில் கல்வி முறையில் தேர்வுகள் கிடையாது.மாணவர்கள் மதிப்பீட்டின் வழியாகவே அடுத்த வகுப்புக்கு மற்றப் படுவார்கள்.
                     அமெரிக்காவில் பொருள்களின் தரம் நன்றாக இருக்கும்.ஏனென்றால் அவரவர் வேலையை அவரவர் நன்றாக பார்ப்பார்கள்.சாலையில் பனி மூட்டம் இருந்தாலும் அதனை அரசு பணியாளர் வந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று இல்லாமல் அவர்களே சுத்தம் செய்து கொள்வார்கள்.இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல 2௦ மணி நேரம் ஆகும்.எனக்க அமெரிக்காவில் கலிபோர்னியா பிடிக்கும்.ஏனென்றால் இங்கு உள்ளது போல் சீதோசன நிலை இருக்கும்.
              அமெரிக்காவில் ஆங்கிலம்,ஸ்பானிஷ் மொழி அதிகம் பேசுவார்கள்.அரிசி அதிகம் சாப்பிடமாட்டார்கள்.பர்க்கர்,நூடுல்ஸ்,பிஸ்தா அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.பர்க்கர் உடம்புக்கு கெடுதி என்று தமிழ்நாட்டில் சொன்னாலும் அங்கு செய்ய கூடிய முறை சுத்தமாக இருக்கும்.அனவைரும் விரும்பி சாப்பிடுவார்கள்.   
                   பள்ளி பருவத்தில் மாணவர்கள் அனவைரும் கேள்விகள் கேட்டு திருப்தியான பதில் கிடைக்கும் வரும் தொடர்ந்து அந்த கேள்விகள் கேட்டு பதில் பெறுவார்கள்.அதனால் அவர்கள் சிறு வயது முதலே தானாகவே சிந்திக்கும் பழக்கம் உண்டாகிறது.அது போன்று சிந்திக்கும் பழக்கம் இருப்பதால் தான் அவர்கள் மிகபெரிய தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் டாலர் பணமாக பயன்படுத்த பட்டு வருகிறது.
                 அமெரிக்காவில் பல இடங்களில் தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இதனில் குறிப்பாக பள்ளிகளில் மிடில் வகுப்புகளில் இரண்டாம் பாடம் ஒன்று படிக்க வேண்டும்.அப்போது நாங்கள் தமிழ் மொழியை இரண்டாம் பாடமாக படித்ததை சொல்லி விடுவோம்.இதற்காக வருடத்தில் 32 வாரங்களில் வாரம் ஒரு நாளில் இரண்டரை மணி நேரத்தில் தமிழ் கற்று கொடுக்கபடுகிறது.அவ்வாறு கற்று கொண்டால் அரசே அவர்களுக்கு அரசாங்கத்தின் நிதியில் பணம் கொடுக்கிறது.நானும் எனது நண்பரும் இணைந்து தமிழ் கற்று கொடுபதற்காக 1௦ மாணவர்களுடன் ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஞாயிற்று கிழமைகளில் பள்ளி ஆரம்பித்தோம்.அடுத்த ஆண்டு 35 மாணவர்கள் சேர்ந்தனர்.இப்போது 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.முதலில் தமிழ் படிக்க மாணவர்கள் ஆர்வமாக வரவில்லை.பிறகு அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து,அங்கேயே விளையாட்டு கற்று கொடுத்து,கலை நிகழ்ச்சிகள் மூலம் ஆர்வபடுத்தி இப்போது 400 மாணவர்கள் பயிலுகின்றனர்.இவ்வாறு பேசினார்.மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
                  நிகழ்ச்சியில் வெங்கட்ராமன்,காயத்ரி,ஸ்வேதா,ஜெனிபர்,ஐயப்பன், ரஞ்சித்,சஞ்சய்,ராஜேஷ்,ஹரிஹரன்,ராஜேஷ்,சின்னம்மாள்,காவியா,உமா,மகாலெட்சுமி,சந்தியா,ராஜேஸ்வரி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.நிகழ்ச்சி நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அமெரிக்க வாழ் இந்தியரான முகநூல் நிர்வாக பிரிவில் பணியாற்றும் ராம் வள்ளியப்பன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் ,செந்தாமரை ஆச்சி உள்ளனர்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive