மத்திய
இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்,
நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட
பள்ளிகளில், மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல்
வெளியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தேர்வில், கருணை மதிப்பெண்
வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், நேற்று வெளியாவதாக இருந்தது; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நாளை தேர்வு முடிவு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அதிலும் தாமதம் ஏற்பட்டால், ஜூன், 4ல் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு முடிவுகளை,www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...