வங்கிகள், தபால் நிலையங்கள், தங்கள் வசம் உள்ள, செல்லாத பழைய, 500 - 1,000
ரூபாய் நோட்டுகளை, அடுத்த மாதம், 20க்குள் ரிசர்வ் வங்கியில் டிபாசிட்
செய்யலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கறுப்பு பண பதுக்கல், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு நவ.,
8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், அப்போது புழக்கத் தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த, பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், தபால் நிலையங்களில் டிபாசிட் செய்ய, அவகாசம் வழங்கப்பட்டது. அதே போல், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டன.
மத்திய அரசின்இந்த நடவடிக்கை யால், சில நாட்களுக்கு கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும், புதிய நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்த பின், பணத் தட்டுப் பாடு சீரடைந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் டிபாசிட் செய்த, பழைய ரூபாய் நோட்டுகளை, டிச., 31வரை, ரிசர்வ் வங்கி களில் டிபாசிட் செய்ய வங்கிகள், தபால் நிலையங் களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின், டிபாசிட் செய்யப்பட்ட நோட்டுகளை, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் தங்கள் வசமே வைத்திருக்க வும் மத்திய அரசுஉத்தரவிட்டது.
இந் நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியில் டிபாசிட் செய்ய, வங்கிகள், தபால் நிலையங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கிகள், தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில், பொதுமக்கள் டிபாசிட் செய்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, அருகில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் டிபாசிட் செய்யலாம். அதற்கு ஈடான புதிய ரூபாய் நோட்டுகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
ஜூலை, 20க்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வங்கிகள், தபால் நிலையங்கள் தங்கள் வசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...