நாடு முழுவதிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் தங்களின்
படிப்புக்கு புத்தகப் பைகள் பெரும் இடையூறாக உள்ளதாக தெரிவித்து
வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு பிரஸ்
கிளப்புக்கு வந்து, எங்களின் புத்தகப் பைகளை தூக்கிப் பாருங்கள்.
அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு தெரியும் என அதிரடியாக பேட்டி
கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த வகையில், மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவையா? என்பது
குறித்து மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை
நடத்தியது.
நாடு முழுவதும் உள்ள 8 நகரங்களில் வசிக்கும் இரண்டாயிரம்
பெற்றோரிடம் இதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. நர்சரி முதல் பத்தாம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இந்த கருத்து கணிப்பு
நடத்தப்பட்டது.
இதில் 67 சதவீத பெற்றோர், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு
புத்தகங்கள் தேவையில்லை. அதற்கு பதிலாக டேப்லட் அல்லது லேப்டாப் போன்றவற்றை
வைத்து பாடம் நடத்தலாம். தினமும் ஒரு மணி நேரம் கம்ப்யூட்டரில் பாடம்
நடத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் இந்த ஏகோபித்த கருத்து தொடர்பாக பிரபல தனியார்
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘டிஜிட்டல் முறையில் கற்பிப்பதால்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையிலான நெருக்கம் குறைந்துவிடும்.
மேலும், டிஜிட்டல் முறை கல்விக்கான முழுமையான பாடதிட்டங்கள்
நம்மிடையே இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதுதவிர, இதற்கான கட்டமைப்புக்கு
அதிக செலவும் ஏற்படும்’ என தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...